செய்திகள்

ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 9,400 கனஅடியாக சரிவு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் இன்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,400 கன அடியாக குறைந்தது.

மாலை மலர்

ஒகேனக்கல்:

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 12,500 கனஅடியாக இருந்தது.

தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் இன்று நீர்வரத்து வினாடிக்கு 9,400 கன அடியாக குறைந்தது.

இன்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் பரிசல் சவாரி சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.