செய்திகள்

ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ்க்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை

இந்திய ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #KhelRatnaAward #PRSreejesh #ArjunaAward #DhyanchandAward #DronacharyaAward

மாலை மலர்

தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில், தகுதிவாய்ந்த  வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன.

இதேபோல் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு இந்திய தடகள சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது. #KhelRatnaAward #PRSreejesh #ArjunaAward #DhyanchandAward #DronacharyaAward