ராயபுரம்:
பாரிமுனை கிளைவ் பேட்டரி வேலாயுதம் தெருவில் உள்ள கார் ஷெட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் நேற்று நள்ளிரவு கார் ஷெட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மூட்டை முட்டையாக செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கார் ஷெட்டின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். செம்மரக்கட்டைகள் கிடைத்தது எப்படி? கப்பலில் வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரிக்கிறார்கள். #tamilnews