செய்திகள்

புதிய 2018 நோக்கியா ஸ்மார்ட்போன்கள்: ரிலீஸ் தேதி வெளியானது

2018 நோக்கியா ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மாலை மலர்

புதுடெல்லி:

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் ஹெச்.எம்.டி. குளோபல் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

முன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவன தலைவர் ஜூஹோ சர்விகாஸ் வெளியிட்ட தகவல்களில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஹெச்.எம்.டி. குளோபல் சார்பில் நோக்கியா விழாவிற்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. 

புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 25-ம் தேதி வெளியிடப்படுகிறது. இவ்விழாவில் நோக்கியா 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் நோக்கியா 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) மற்றும் நோக்கியா 7 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 5.3 இன்ச் குவாட் ஹெச்.டி. 2560x1440 பிக்சல் டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறுது.

இத்துடன் 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி, முன்பக்கம் 12 எம்பி அல்லது 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இணையத்தில் கசிந்திருக்கும் தகவல்கள் உறுதி செய்யப்படாத நிலையில், பிப்ரவரி 25-ம் தேதி வெளியீட்டின் போது அதிகாரப்பூர்வ தகவல் தெரியவரும்.