அமித்ஷா 
செய்திகள்

உள்துறை மந்திரி அமித்ஷா நாளை குஜராத் பயணம்

உள்துறை மந்திரி அமித்ஷா நாளை குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

மாலை மலர்

அகமதாபாத்:

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒருநாள் பயணமாக நாளை குஜராத் செல்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

அகமதாபாத் நகரில் சுமார் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்கம், மின்சார பஸ்கள் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பிறகு, உள்துறை மந்திரி அமித்ஷா செல்லும் முதல் பயணம் என்பதால் அவருக்கு உறசாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.