செய்திகள்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி இந்திய-நேபாள எல்லையில் கைது

உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திய-நேபாள எல்லையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.

புதுடெல்லி:

இந்திய-நேபாள எல்லையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டான். உத்தரபிரதேசத்தில் உள்ள எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நசீர் அகமது(34) என்ற தீவிரவாதி சோனவுலி என்ற எல்லைப் பகுதியில் கைது செய்யப்பட்டான்.

பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “அகமது, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தைச் சேர்ந்த பனிகால் பகுதியை சேர்ந்தவர். அகமது பாகிஸ்தானில் கடந்த 2003 செப்டம்பர் முதல் வசித்து வந்தார். இவர் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பல்வேறு வன்முறை தாக்குதல்களை நடத்தி உள்ளான். 

இவன் இந்தியாவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டான். எல்லைப் பகுதியில் நுழைய முயன்ற போது பாதுகாப்பு படையினர் சிக்கிக் கொண்டான். அப்போது உரிய அடையாள அட்டை இல்லாததை அடுத்து கைது செய்யப்பட்டான்” என்றார்.

அகமதுவிடம் ராணுவத்தினர் நடத்திய விசாரணையில் கடந்த மே 10-ம் தேதி காத்மண்டுக்கு பைசலாபாந்த் நகரில் இருந்து சார்ஜா வழியாக வந்தது தெரிய வந்தது.