ராகுல் போஸ் 
செய்திகள்

ஓட்டலில் சாப்பிட்ட வாழை பழத்துக்கு ரூ.442 பில் - நடிகர் அதிர்ச்சி

பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ் ஐந்து நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்ட இரண்டு பழங்களுக்கான ரூ.442.50 விலை ரசீதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்தியில் பிரபல நடிகராக விளங்குபவர் ராகுல் போஸ். நடிகர், இயக்குனர், சமூக ஆர்வலர் என்று பன்முக அடையாளம் கொண்டவர். தமிழில் விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசனுடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

ராகுல் போஸ் படப்பிடிப்புக்காக சண்டிகர் சென்றுள்ளார். அங்கு உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினார். உடற்பயிற்சி முடிந்ததும் வாழைப்பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் வாழைப்பழத்துடன் வந்த ரசீது இவரை ஆச்சரியப்படுத்தியது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோவாகவே பதிவு செய்து வெளியிட்டுள்ளார் ராகுல் போஸ்.

‘நான் சண்டிகரில் ஒரு ஓட்டலில் தங்கி இருக்கிறேன். ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது இரண்டு வாழைப்பழங்கள் கேட்டேன். எனக்கு கொடுத்தார்கள். அதற்கான ரசீதை பாருங்கள்’ என்று ரசீதை காட்டினார்.

அதில் இரண்டு பழங்களுக்கான விலை, 375 ரூபாய் எனவும், ஜி.எஸ்.டி வரி ரூ.67.50 எனவும் ஜி.எஸ்.டி.யோடு சேர்த்து ரூ. 442.50 என்றும் அச்சிடப்பட்டுள்ளது’ இவற்றுக்கு நான் தகுதியானவனா தெரியவில்லை’

இவ்வாறு அவர் கிண்டலாக பேசி முடித்துள்ளார்.

SCROLL FOR NEXT