செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர், வருவாய்துறை செயலருக்கு மாத ஊதியம் வழங்க தடை - ஐகோர்ட்டு உத்தரவு

மாதாவரம் தாலுகா அலுவலம் செயல்படும் கட்டிடத்தின் உரிமையாளருக்கு வாடகை அளிக்காததால் அவர் தொடர்ந்த வழக்கில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் உள்ளிட்டோருக்கு ஊதியம் வழங்க தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

திருவள்ளூர் மாவட்டம் மாதாவரம் தாலுகா அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றனது. இந்த கட்டிடத்தின் வாடகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதாகவும், ஒரு வருடமாக வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும் கட்டிடத்தின் உரிமையாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாதாவரம் தாசில்தார் மற்றும் வருவாய்துறை செயலர் ஆகியோருக்கு இம்மாத ஊதியம் வழங்க தடை விதித்து உத்தரவிட்டனர்.