செய்திகள்

நகர்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது- டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தேர்தல் முடியும் வரை நகர்ப்பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்று டிஜிபிக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #parliamentelection #tndgp #maduraicourt

சென்னை:

தேர்தல் நெருங்குவதால் நகர் பகுதிகளில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என நாராயணன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 

தேர்தல் முடியும் வரை நகர்ப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது.

மைதானங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம் என தமிழக டிஜிபிக்கு  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #maduraicourt #parliamentelection #tndgp