செய்திகள்

தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை - ஐகோர்ட்டு

தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #TTVDinakaran

சென்னை:

ஐரோப்பிய யூனியனில் உள்ள ஓட்டலில் ரூ.36.36 லட்சம் அமெரிக்க டாலரும், ஒரு லட்சம் பிரிட்டன் பவுண்டும் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக டி.டி.வி. தினகரன் மீது அமலாக்கப் பிரிவு, அன்னிய செலாவணி மோசடி வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

அதேபோல, பார்க்லே வங்கியில் ரூ.1.04 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்தது தொடர்பான மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் விசாரித்தார். பின்னர், இந்த வழக்கிற்கு வருகிற ஜூன் 9ந்தேதிக்குள் அமலாக்கப்பிரிவு பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். அதுவரை எழும்பூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள அன்னிய செலாவணி மோசடி வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டார். #TTVDinakaran

SCROLL FOR NEXT