10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று கவுஹாத்தியில் நடைபெற்ற 72-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி. - நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்க இரு அணியினரும் கடுமையாக முயற்சித்தனர். இருப்பினும் கோல் போடுவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. 87-வது நிமிடம் டெல்லி அணியின் கலு உச்சே கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு எந்த கோல் அடிக்காததால் டெல்லி டைனமோஸ் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.