கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா கோவைரோடு பகுதியில் நேற்று கரூர் டவுன் போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் கல்லூரி மாணவர்கள், போலீசாருடன் சேர்ந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு சாக்லெட் வழங்கினார்கள். மேலும் ஹெல்மெட் அணியாதவர்களிடம் அதனை அணிய வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.