காற்றில் சரிந்த வாழை மரங்களை காணலாம் 
செய்திகள்

தூத்துக்குடி அருகே பலத்த காற்றில் வாழைகள் சேதம்

தூத்துக்குடி அருகே பலத்த காற்றில் வாழைகள் சரிந்து சேதம் அடைந்தன.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. கடந்த 4 நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் அடித்தது. இதனால் சாலையோர குளிர்பான விற்பனை கடைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இளநீர், நுங்கு, கரும்புசாறு உள்ளிட்டவைகளையும் அதிகமாக விரும்பி வாங்கி சாப்பிட்டனர்.

அதேபோன்று கடந்த சில நாட்களாக பலத்த காற்றும் வீசி வருவதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் ஓரளவு தப்பித்து வருகின்றனர். நேற்று காலையிலும் மணிக்கு சுமார் 45 கிலோ மீட்டர் வரையிலும் பலத்த காற்று வீசியது.

இதனால் தூத்துக்குடி அருகே மேல கூட்டுடன்காடு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த ஏராளமான வாழைகள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். பலத்த காற்று வீசியதால், அவ்வப்போது சாலையில் புழுதி மணலாக வாரி இறைத்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT