பனி மூட்டம் 
செய்திகள்

ஊட்டியில் பகல் நேரத்தில் கடும் பனி மூட்டம் - பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

தொட்டபெட்டா, கோத்த கிரி சாலைகளில் பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டதால், பகல் நேரங்களிலேயே வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டப்படி சென்றன. தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் கடும் பனி மூட்டம் காரணமாக கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் நபர்கள் கூட தெரியாத அளவுக்கு இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன.

மஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான எடக்காடு, தாய்சோலை, கோரக்குந்தா, இத்தலார், எமரால்டு காத்தாடி மட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கடுங்குளிர் நிலவுகிறது.

பனிமூட்டத்தால் இயற்கை எழிலை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனினும், இந்த இதமான காலநிலை தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.