செய்திகள்

தூத்துக்குடியில் கனமழை - சென்னையில் இருந்து செல்லும் 2 விமானங்கள் ரத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. #ThoothukudiRain #FlightCancelled

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் நேற்று இரவு மழை பெய்தது.

மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.