செய்திகள்

பெரியகுளத்தில் கனமழை: சோத்துப்பாறை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்வு

பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சோத்துப்பாறை நீர் மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது.

பெரியகுளம்:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் மற்றும் குளம், கண்மாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த 2 நாட்களாகவே விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சோத்துப்பாறை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது.

நேற்று காலை அணையின் நீர்மட்டம் 82.65 அடியாக இருந்தது. வரத்து 59 கன அடியாக இருந்தது. இன்று காலை 9 அடி உயர்ந்து 91.84 அடியாக உள்ளது. வரத்து 115 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 51.26 மி.கன அடி.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.50 அடி. வரத்து 1135 கன அடி. திறப்பு 218 கன அடி. இருப்பு 2925 மி.கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 33.50 அடி. வரத்து 347 கன அடி. திறப்பு 40 கன அடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 45 அடி. வரத்து 258 கன அடி.

பெரியாறு 5.4, தேக்கடி 5.8, வீரபாண்டி 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

SCROLL FOR NEXT