புதுச்சேரி:
கேரள மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலத்த மழையினால் ஏராளமான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, இன்று காலை கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயனுடன் டெலிபோனில் பேசினார்.
அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த துயர சம்பவத்தில் புதுவையும் பங்கேற்பதாகவும், மேலும் வெள்ள சேதங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய புதுவை அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். #keralaheavyrain #narayanasamy