ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தமிழக ஆந்திர எல்லையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
இங்கு வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினிகளை அழிக்கும் பணிகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.
அப்போது கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவு வதால் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்ச உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊழியர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
இருமல், தொடர் தும்மல், காய்ச்சல் உள்ளவர்களின் ரத்தம், சளி ஆகியவை எடுத்து உடனுக்குடன் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதேமாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை. இது குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். வீண் வந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கொரோன வைரஸ் பீதியை வைத்து விலைக்கு முக கவசங்களை கூடுதல் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.