செய்திகள்

ஜாதி பெயரை கூறி மாணவிகளை திட்டிய தலைமை ஆசிரியை சஸ்பெண்டு

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளை ஜாதி பெயரை கூறி திட்டிய தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

மாலை மலர்

கோவை:

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரணம் சி.பி. கந்தசாமி நகர் மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளை அங்கு தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வரும் ஜெயந்தி தங்களை ஜாதி பெயரை சொல்லி திட்டுவதுடன் அடித்ததாக நேற்று கோவை கலெக்டரிடம் மனு அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அதிகாரி கீதா விசாரணை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியை ஜெயந்தியை சஸ்பெண்டு செய்து எஸ்.எஸ். குளம் மாவட்ட கல்வி அலுவலர் கீதா உத்தரவிட்டார்.