புதுடெல்லி:
ஆதாயம் தரும் இரட்டை பதவிகளை வகித்ததாக கூறி 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தேர்தல் ஆணையத்தில் பரிந்துரையின் பெயரில் மத்திய அரசு தகுதி நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து 20 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, இது தொடர்பான பதில் மனுக்களை மத்திய அரசு, தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வரும் திங்கள் அன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், அது வரை சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிட கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
நீதிபதிகளின் உத்தரவை ஏற்ற தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட மாட்டாது என பதிலளித்தனர்.