செய்திகள்

நாகலாந்து நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்

நாகலாந்து மாநில முதலமைச்சர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற கவர்னரின் உத்தரவுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

நாகாலாந்து மக்கள் முன்னணியின் ஆட்சி நடந்து வரும் நாகலாந்தில், முதல்வர் லெய்சீட்சுவுக்கு எதிராக முன்னாள் ஜெலியாங் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள ஜெலியாங், தனக்கு 41 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறினார், அத்துடன், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT