செய்திகள்

ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா தொடர்பான எடுத்த நடவடிக்கை என்ன? வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிகளின்போது பணப் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படி வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், பணப் பட்டுவாடாவில் ஈடுபட்ட முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் தேர்தலை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரியிருந்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், ஆர்.கே. நகரில் நடந்த பணப் பட்டுவாடா தெடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  கேள்வி எழுப்பியது.

SCROLL FOR NEXT