மதுரை:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக, அதாவது டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது. ஆனால், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த தேர்தலை 15 நாளில் நடத்துவதற்கு உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல் நடத்தும் தேதி ஏதும் முடிவு செய்யப்பட்டுள்ளதா? என தமிழக தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இது பற்றி தமிழக தேர்தல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.