செய்திகள்

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது? - அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இடைத்தேர்தல் நடத்தாத தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர்.