உயர் நீதிமன்ற மதுரை கிளை 
செய்திகள்

தந்தை, மகன் மரண வழக்கில் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைக்கவில்லை- நீதிபதிகள் அதிருப்தி

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான விசாரணைக்கு போலீசார் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மதுரை:

சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்தது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை, மகன் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போலீசார் போதிய ஒத்துழைப்பு தரவில்லையென தெரிகிறது என்று நீதிபதிகள் கூறினர். அத்துடன், தடயவியல் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையம் சென்று தேவையான ஆவணங்களை சேகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.