செய்திகள்

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு மதுரை ஐகோர்ட் நோட்டீஸ்

18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. #HCMaduraiBench #ElectionCommission

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த வேதா என்ற தாமோதரன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம் மனு அளித்த விவகாரத்தில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவை எதிர்த்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட18 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்தனர்.

இதனால் 18 தொகுதிகளைச் சேர்ந்த 27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வழியில்லாமல் தவிக்கிறார்கள்.