செய்திகள்

ரஷித் கான் பந்தை விளாசியதற்கு இதுதான் காரணம் என்கிறார் தவான்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்த தவான், ரஷித் கான் பந்தை துவம்சம் செய்ய இதுதான் காரணம் என்கிறார் தவான். #INDvAFG

முதல் இன்னிங்சில் இந்தியா 474 ரன்கள் குவித்தது. தவான் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 107 ரன்கள் சேர்த்தார். 87 பந்தில் சதம் அடித்த தவான், மதிய உணவு இடைவேளைக்கு முன் சதத்தை பூர்த்தி செய்து சாதனைப் படைத்தார்.

ஆப்கானிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் 34.5 ஓவரில் இரண்டு மெய்டன் ஓவர்கள் மட்டுமே வீசி 154 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். சராசரியாக 4.42 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

தவான், ரஷித் கான் ஆகியோர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார்கள். அப்போது வலைப்பயிற்சியின் போது ரஷித் கானை பந்தை எதிர்கொண்டேன். இதுதான் ரன் குவிக்க உதவியது என தவான் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT