செய்திகள்

சமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா - ஈரான் அதிபர் கடும் தாக்கு

ஒருபுறம் வரிசையாக தடைகளை விதிக்கும் அமெரிக்கா மறுபுறம் சமாதானப் பேச்சுக்கு கதவுகள் திறந்திருப்பதாக பொய் சொல்கிறது என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி குற்றம்சாட்டியுள்ளார்.

மாலை மலர்

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான பகை பன்மடங்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை பிறப்பித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஒருபுறம் வரிசையாக தடைகளை விதிக்கும் அமெரிக்கா மறுபுறம் சமாதானப் பேச்சுக்கு கதவுகள் திறந்திருப்பதாக பொய் சொல்கிறது என  ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி குற்றம்சாட்டியுள்ளார்.