செய்திகள்

கற்பழிக்கப்பட்ட சிறுமி பிரதமர் மோடிக்கு இ-மெயில் - 2 பேர் மீது போலீசார் வழக்கு

அரியானாவில் பள்ளிக்கூட ஊழியர்களால் கற்பழிக்கப்பட்ட மாணவி பிரதமர் அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பியதை அடுத்து 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோனிபட்:

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த மாணவியை பள்ளிக்கூட ஊழியர்கள் கும்பலாக சேர்ந்து கற்பழித்தனர். இதுபற்றி அந்த மாணவி தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் புகாரை கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவம் தொடர்பாகவும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பினார்.

அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அலுவலகம் சார்பில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கில் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். மாணவியை கற்பழித்ததாக பள்ளிக்கூட ஊழியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT