புதுடெல்லி:
90 இடங்களை கொண்ட அரியானா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 31 இடங்களை கைப்பற்றியது. பாஜக பெரும்பான்மை பெற்றபோதிலும் ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவைப்பட்டது.
இதையடுத்து 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியின் துணையுடன் பாஜக அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைத்தது.
கடந்த 27-ம் தேதி மனோகர் லால் கட்டார் தொடர்ந்து இரண்டாவது முறை அரியானா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றார்.
நேற்று டெல்லி வந்த மனோகர் லால் கட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.
இந்நிலையில், சவுதி அரேபியா சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து இன்று டெல்லி திரும்பிய பிரதமர் மோடியை மனோகர் லால் கட்டார் சந்தித்து ஆசி பெற்றார்.