செய்திகள்

பிக் பாஷ் அணியுடன் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் மேலும் 2 வருடம் ஒப்பந்தம்

பிக் பாஷ் லீக் அணியான சிட்னி தண்டருடன் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் தனது ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டியுள்ளார்.

மாலை மலர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஒப்பந்தம் ஆன முதல் இந்திய வீராங்கனை இவர்தான். சிட்னி தண்டர் அணி ஹர்மன்ப்ரீத் கவுரை ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது. முதல் தொடரிலேயே 296 ரன்கள் அடித்ததுடன் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.