தாலி 
செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே மாணவிக்கு கட்டாய தாலி கட்டி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்

ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவிக்கு கட்டாய தாலி கட்டி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி நாகர்கோவில் அருகில் உள்ள அம்மாண்டி விளை பகுதியில் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த கொடியரசன் மகன் ராஜேஷ்குமார் (வயது24) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளார். 

கடந்த ஜுன் 15-ந் தேதி மாணவி படிக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார். அவரை வெளியே வரவழைத்து ஒரு கடை முன்பு வலுக்கட்டாயமாக தாலி கட்டினார்.

பின்னர் மாணவியுடன் செல்பி எடுத்துக் கொண்டு அதை வைத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ராஜேஷ்குமாரின் தொல்லை வரம்பு மீறி போகவே தனது பெற்றோரிடம் மாணவி கதறி அழுதுள்ளார். 

இது குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில்  போலீசார் ராஜேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடி வருவதை அறிந்ததும் அவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.