செய்திகள்

ஒயின்கொடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது

பந்தலூரில் ஒயின்கொடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். #DMK

பந்தலூர்:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெல்லியாளம் அருகே உள்ள டேன்டீ சரகம் 3-வது பகுதியை சேர்ந்தவர் திராவிடமணி (வயது 54). இவர் தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இது தவிர இவர் கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளர்ச்சி குழுத்தலைவராக உள்ளார்.

இந்நிலையில் இவர் தனது வீட்டருகே உள்ள சிறுவர்களுக்கு லே-டாப்பில் சினிமா காண்பிப்பது, கேம்ஸ் விளையாட வைப்பது உள்ளிட்டவைகளை செய்து வந்தார். வீட்டில் விளையாடிய 2 சிறுவர்களுக்கு ஒயின் கொடுத்து மயக்கமடைய செய்துள்ளார். பின்னர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து ஒரு சிறுவனின் தந்தை சேரம்பாடி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து சைல்டு லைன் நிர்வாகிகள் நேரடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் வலியுறுத்தினர்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி திராவிடமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். #DMK

SCROLL FOR NEXT