மாற்றுத்திறனாளிகள் நல செயற்பாட்டாளரான விராலி மோடி அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் இந்தியா வந்தார். டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், ‘மும்பையிலிருந்து டெல்லி செல்ல திட்டம் இருந்தது. இதையடுத்து விமானத்தில் பயணித்து இந்திராகாந்தி விமான நிலையத்தை வந்தடைந்தேன். அங்கு சோதனையின்போது சிஐஎஸ்எப் பெண் ஊழியர் ஒருவர் என்னை பரிசோதனை செய்ய வீல் சேரில் இருந்து எழுந்து நிற்குமாறு சொன்னார்.
கடந்த 2006-ல் ஏற்பட்ட முதுகு தண்டுவட காயத்துக்குப் பின்னர் என்னால் நடக்க இயலாமல் போனது என்றேன். ஆனால் அவர் அதனைக் கேட்கவே இல்லை. தொடர்ந்து கூச்சலிட்டார். சில அதிகாரிகளும் கேட்க தயாராக இல்லை. நான் நாடகமாடுவதாக கூறி அந்த பெண் ஊழியர் பின்னர் துன்புறுத்தினார்.
சோதனைக்கு எழுந்து நிற்க வேண்டும் என வற்புறுத்தினார். என்னுடன் துணைக்கு வந்த பெண் ஒருவர் எல்லாவற்றையும் எடுத்துரைத்தார். அதற்குள் வேறு ஒரு நபர் வந்து என்னை அனுப்பிவைத்தார்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விராலி மோடி இது தொடர்பாக சிஐஎஸ்எப் அலுவலகத்திலும் புகார் கொடுத்திருக்கிறார். இது குறித்து சிஐஎஸ்எப் செய்தி தொடர்பாளர் அனில் பாண்டே கூறுகையில், ‘புகாரை பரிசீலித்து வருகிறோம்.
இந்திரா காந்தி விமான நிலையத்தில் உள்ள சிஐஎஸ்எப் ஊழியர் ஒருவர் புகார் கொடுத்த விராலியிடம் பேசியிருக்கிறார். முழு விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.