செய்திகள்

பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க ஆளில்லா விமானம் ஆவேச தாக்குதல்: 3 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் இன்று நடத்திய தாக்குதலில் ஹக்கானி தீவிரவாத அமைப்பின் தளபதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இயங்கி வரும் ஹக்கானி தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த குழுவுக்கு பாகிஸ்தான் அரசு மறைமுகமாக உதவுவதாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சுமத்தின.

இந்நிலையில், கைபர் - பக்துங்கா மாகாணத்தில் உள்ள ஹங்கு மாவட்டத்தின் ஸ்பீன் தால் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டை குறிவைத்து அமெரிக்க ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) இரண்டு ஏவுகணைகளை வீசின. இந்த அதிரடி தாக்குதலில் ஹக்கானி இயக்கத்தின் மூத்த தளபதி ஹவாரி உள்பட மூன்று தீவிரவாதிகள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 17-ம் தேதி இதே போன்ற ட்ரோன் தாக்குதலை அமெரிக்கா நடத்தியது குறிப்பிடத்தக்கது.