செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்- அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு மோதிரம் பரிசு

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான இன்று அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தங்கம் மோதிரம் அணிவித்தார். #BJP #HappyBirthDayPM #HappyBdayPMModi

மாலை மலர்

பிரதமர் மோடியின் பிறந்த நாளை இன்று பா.ஜனதாவினர் உற்சாகமாக கொண்டாடினார்கள். கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் வழங்கினார்கள்.

ரத்ததான முகாம், மருத்துவமுகாம் உள்ளிட்ட சேவைப் பணிகளை செய்தார்கள். மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றியடைய செய்யும் வகையில் இனிப்புகள் வழங்கி பொது மக்களை திரட்டி தெருக்களை சுத்தப்படுத்தும் பணியிலும் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டார்கள்.

மத்திய சென்னை மாவட்ட தலைவர் தனஞ்செயன் புரசைவாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்க ஏற்பாடு செய்து இருந்தார்.