செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணம்

சித்தேரிக்கரை அருகேயுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரும்பாவூர்:

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் ஜவகர்லால் தெருவை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). கூலித்தொழிலாளியான இவருக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்ற துரைசாமி வீடு திரும்பவில்லை. 

இந்த நிலையில் அவர் நேற்று காலை சித்தேரிக்கரை அருகேயுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் போலீசார், துரைசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT