ஆர்ப்பாட்டம் 
செய்திகள்

கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி அருகே கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடி:

பரமக்குடி எமனேசுவரம் அனைத்து கைத்தறி நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் இருப்பில் உள்ள சரக்குகளை கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். புங்கர் பீமா திட்டத்தில் 50 வயதுக்குமேல் உள்ள நெசவாளர்களை சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகி குப்புசாமி உள்பட பலர் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.

SCROLL FOR NEXT