செய்திகள்

பாகூர் அருகே மாற்று திறனாளி பெண் மானபங்கம்

பாகூர் அருகே மாற்று திறனாளி பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

பாகூர்:

பாகூரை அடுத்த குருவி நத்தம் பால்வாடி வீதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கும் மேல் பரிக்கல்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனால் திருநாவுக்கரசு அடிக்கடி மேல் பரிக்கல்பட்டு செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்று முன்தினம் அங்கு சென்றார். இரவு 2 மணிக்கு அந்த பகுதியில் முள்ளோடை வீதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி அமுதா (55) அங்கு நின்றார்.

அவர் திருநாவுக்கரசிடம் இங்கு ஏன் நிற்கிறாய்? என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரம் அடைந்த திருநாவுக்கரசு அமுதாவை கீழே தள்ளி சேலையை கிழித்து மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார். கீழே தள்ளியதில் காயம் அடைந்த அமுதா பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இது குறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் வழக்குப்பதிவு திருநாவுக்கரசை தேடி வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று இரவு தனது கள்ளக்காதலியை சந்திக்க மேல்பரிக்கல்பட்டுக்கு வந்தார். அப்போது பொதுமக்கள் உதவியுடன் போலீசார் திருநாவுக்கரசை கைது செய்தனர்.