முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து (84), கிராண்ட்ஹோம் (58) ஆகியோரின் அரைசதத்தால் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 87 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. பிளண்டெல் 12 ரன்னுடனும், வாக்னர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிளண்டெல் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். வாக்னர் நேற்று எடுத்திருந்த 1 ரன்னோடு வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு சவுத்தி உடன் டிரென்ட் போல்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது.
சவுத்தி 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்கள் குவித்துள்ளது. போல்ட் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேப்ரியல் 4 விக்கெட்டும், ரோச் 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டனும், தொடக்க வீரரும் ஆன பிராத்வைட்-ஐ விட மற்ற வீரர்களான பொவேல் (0), ஹெட்மையர் (28), ஷாய் ஹோப் (15), சேஸ் (12), அம்ப்ரிஸ் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். டவ்ரிச் 35 ரன்களும், பிராத்வைட் 66 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.