கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலப் (ரூமேனியா)- மரியா (ஜெர்மனி) மோதினர். இதில் ஹால்ப் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
2-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ன்ட் ரோவாவை (ரஷியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
இதே போல ரட்லன்ஸ்கா (போலந்து), கார்னட் (பிரான்ஸ்), கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர்.
அமெரிக்காவின் மெடிசன் கீஸ் 6-3, 3-6, 1-6 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மார்டிக்சிடம் தோற்றார்.