ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் தரநிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப், பிரான்ஸ் வீராங்கனை கரோலினா கார்சியாவை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே ஹாலெப்பின் ஆதிக்கம் இருந்தது. முதல் செட்டை சற்று போராடி கைப்பற்றினாலும், இரண்டாவது செட்டை எளிதாக வென்றார் சிமோனா. இறுதியில் 7-5 6-1 என்ற செட்கணக்கில் ஹாலெப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன் சாம்பியனான கார்சியாவை ரோஜர்ஸ் கோப்பை தொடரில் தொடர்ந்து இரண்டு முறை சிமோனா ஹாலெப் வீழ்த்தி உள்ளார்.