செய்திகள்

ஸ்டாலினின் சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயார் - எச்.ராஜா

இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என ஸ்டாலின் கூறியதற்கு, சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராக இருப்பதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #HRaja

மாலை மலர்

தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கப்பட்டார். இதற்கென இன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய பொதுக்குழுவில் பேசிய மு.க ஸ்டாலின், திமுக-வை வழிநடத்த இன்று புதிதாக பிறந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா என தொண்டர்கள் மத்தியில் மு.க ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார்.