செய்திகள்

கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறார்- எச்.ராஜா குற்றச்சாட்டு

நடிகர் கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா நிருபரிடம் கூறியதாவது:-

நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சியை ஆரம்பித்து உள்ளார். அவர் தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து தொடங்கி உள்ளார்.

அப்துல்கலாம் வீட்டுக்கு சென்றதை நான் தவறாக நினைக்கவில்லை. ஆனால் அங்கு சென்றவர் ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதபுரம் கோவிலுக்கு சென்றிருக்க வேண்டும்.

ஏற்கனவே தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிராக திராவிடக் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கமல்ஹாசனும் இந்த வரிசையில் புதிதாக முளைத்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

SCROLL FOR NEXT