செய்திகள்

குட்கா ஊழல் வழக்கு - மாதவராவ் உள்ளிட்ட 4 பேர் ஜாமீன் மனு தள்ளிவைப்பு

குட்கா ஊழல் வழக்கில் கைதான மாதவராவ் உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Gutkhascam #MadhavaRao

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டன. இதற்காக அமைச்சர்கள், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சம் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது. இதனடிப்படையில், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, ஏற்கனவே கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதி வசந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். #Gutkhascam #MadhavaRao