குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல் செய்த மக்கள் 
செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்ககோரி, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்ககோரி, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அருகே ஓபசமுத்திரம் கிராமம் உள்ளது. இங்கு 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இவர்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்படவில்லை என புகார் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓபசமுத்திரம் ஊராட்சி செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுலகத்தில் பொதுமக்கள பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில் குடி தண்ணீர் வழங்கக் கோரி அப்பகுதி பெண்கள் இன்று காலை கள்ளூரில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கிச் சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்தனர். மேலும் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் சப்- இன்ஸ் பெக்டர் சத்யமூர்த்தி தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி இன்று மாலைக்குள் குடி தண்ணீர் சப்ளை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.