கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பஜார் வீதியில் செல்போன் விற்பனை மற்றும் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருபவர் பீட்டர்.
இன்று காலை அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பின்பக்க சுவரில் பெரிய துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் கடையில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம கும்பல் அள்ளிச் சென்றிருப்பது தெரிந்தது.
கடையின் முன்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் என்பதால் பின்பக்க சுவரில் துளை போட்டு மர்ம கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் தற்போது 3-வது முறையாக இந்த கடையில் கொள்ளை நடந்து உள்ளது. மர்ம கும்பல் குறி வைத்து கைவரிசை காட்டி வருகிறார்கள்.