கைது 
செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே மினி வேனில் உவர்நீர் மண்புழுக்களை கடத்திய 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே மினி வேனில் உவர்நீர் மண்புழுக்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று கும்மிடிப்பூண்டி வனசரகர் சுரேஷ்பாபு தலைமையில் வனசரகர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது ஒரு மினி லோடு வேனில் கடலூரில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு 20 கிலோ எடை கொண்ட உவர்நீர் மண்புழு கடத்தப்படுவது தெரியவந்தது.

இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மண்புழுக்களை கடத்தியதாக நன்நிலம் தாலுகாவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 45) மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த விநாயத்துல்லா (53) ஆகிய 2 பேரை கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.