செய்திகள்

கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் - குலாம் நபி ஆசாத் பேட்டி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். #KarunanidhiUnwell #KauveryHospital #GhulamNabiAzad

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலை மோசமானதையடுத்து காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து வருகின்றனர்.

பின்னா குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தோம். அவர் ஐசியு வார்டில் உள்ளார். அவரது உடல்நிலையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்படும்  சிகிச்சை குடும்பத்தினருக்கு திருப்தி அளித்துள்ளது. அவர் சில தினங்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று நம்புவோம். இதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.