செய்திகள்

குஜராத்: மேலும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா - பா.ஜ.க.வில் ஐக்கியமாக திட்டம்

குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவியுள்ள நிலையில் இன்று மேலும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

மாலை மலர்

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் தொடர்பான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, குஜராத் காங்கிரசில் இருந்து சித்பூர் தொகுதி எம்.எல்.ஏ பல்வந்த் சிங் மற்றும் விரம்கம் தொகுதி எம்.எல்.ஏ. தேஜாஸ்ரீ படேல், விஜப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான பி.ஐ.படேல் ஆகியோர் காங்கிரசில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தனர். அதன்பின்னர், அவர்கள் முன்று பேரும் பா.ஜ.க. அலுவலகம் சென்று தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். 

இதனால் காங்கிஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அதிர்ச்சி விலகுவதற்குள்ளாக இன்று மன்சிங் சவுகான் மற்றும் சனாபாய் சவுத்ரி ஆகிய இரண்டு காங்கிரஸ் எம்,.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 60 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில், வகேலா உள்பட 6 பேர் பதவி விலகியதால் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 54 ஆக குறைந்துள்ளது.